நீச்சல் குளத்தில் தொகுப்பாளினி ரம்யா.! பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்.

0
ramya
ramya

சினிமா நடிகைகளுக்கு இணையாக டிவி நடிகை மற்றும் தொகுப்பாளினிகளுக்கு  ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள், அந்த வகையில் ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருபவர் ரம்யா.

இவரின் நிகழ்ச்சியை காண ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் ஆகிய திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதேபோல் ரம்யாவுக்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்று விட்டார், 2014ஆம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்பு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று விட்டார். தற்போது மீண்டும் தனது தொகுப்பாளினி பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

இவர் கடைசியாக அமலா பால் ஆடை திரைப்படத்தில் நடித்திருந்தார், அந்த திரைப்படத்தில் அமலாபாலுக்கு தோழியாக நடித்திருந்தார், மேலும் அதில் சில சர்ச்சை காட்சிகளும் இருந்தது. எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் புகை படத்தை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது ஏனென்றால் நீச்சல்குளத்தில் ஃபுல் மேக்கப்புடன் இவர் கொடுத்துள்ள போஸ்  பார்த்து ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

ramya
ramya