சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, இவர் விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்றும் கூறலாம், படத்திற்கு பிறகு நீண்ட காலம் தொலைக்காட்சி பக்கம் தலை காட்டாமல் இருந்த டிடி. விவாகரத்து பெற்றதும் அடிக்கடி தொலைக்காட்சிகளில் தலை காட்டி வருகிறார்.
தற்பொழுது திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் எங்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் அந்த நிகழ்ச்சி மூலம் பெரும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். ஆனால் தற்பொழுது இவர் தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்து சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

