விஜய் த்ரிஷா கெமிஸ்ட்ரியில் வெளியான படங்கள்.! முத்துபாண்டியவே காலிசெய்த வேலு…

சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் நீண்ட வருடங்கள் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்கள் ஆனால் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் தடம் தெரியாமல் குணச்சித்திர வேடங்களில் அல்லது சீரியல்களில் தஞ்சம் அடைகிறார்கள் ஆனால் ஒரு சில நடிகைகள் தற்போது வரையிலும் சினிமாவில் கதாநாயகியாகவே நடித்து வருகிறார்கள் அவர்களில் ஒருவர்தான் நடிகை திரிஷா.

இவர் நடிகர் விஜயுடன் நான்கு படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் தற்போது லியோ திரைப்படத்தை சேர்த்து ஐந்தாவது திரைப்படத்தில் நடித்து வருகிறார் கிட்டத்தட்ட 20 வருடங்களாக இவர்களுடைய கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகி கொண்டே வருகிறது. இப்படி இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஐந்து படங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

கில்லி:- தரணி இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் கில்லி இந்த திரைப்படம் வெளியாகி 200 நாட்களுக்கு மேல் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் விஜயின் கெரியரில் மிக சிறந்த படமாக இது அமைந்தது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா அவர்கள் நடித்திருப்பார் மேலும் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார்.

இந்த படத்திற்கு பிறகு நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு வில்லனாக பிரபலமானார். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் அவருடைய வசனம் இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் உலாவருகிறது.

திருப்பாச்சி:- இயக்குனர் பேரரசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் திருப்பாச்சி இந்த திரைப்படத்தில் விஜய் திரிஷா பசுபதி மற்றும் யுகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஒரு அண்ணன் தங்கை சென்டிமென்ட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது மேலும் இந்த திரைப்படம் வெளியாகி 175 நாட்களுக்கு மேல் ஓடி வணிக ரீதியாக வெற்றி அடைந்தது.

ஆதி:- இயக்குனர் ரமணா இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஆதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது இந்த திரைப்படத்தில் விஜய் திரிஷா பிரகாஷ்ராஜ் விவேக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

குருவி:- இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான குருவி திரைப்படம் கலையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா விவேக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை என்றாலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்ஷன் பார்த்து வெற்றி பெற்றது.

லியோ:- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படம் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா அவர்கள் நடித்து வருகிறார் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து மறுபடியும் விஜய்க்கு ஜோடியாக இணைந்து இருக்கிறார் நடிகை திரிஷா.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது இதனை தொடர்ந்து இந்த படத்தில் விஜய்க்கும் திரிஷாவிற்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுமா ஆகாதா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Leave a Comment