வசூல் சக்கரவர்த்தி தளபதி விஜயின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா.? அதிர்ந்து போன திரையுலகம்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரம் விஜய்.  இவர் நடிப்பில் வம்சி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற பொழுதிலும் வசூல் ரீதியாக 300 கோடிக்கு மேல் அள்ளி சாதனை படைத்தது இந்த வெற்றியை விஜய் உட்பட தயாரிப்பாளர், இயக்குனர் என அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் தோல்வியை சந்திக்காத இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் வெற்றிகரமாக முடிந்த நிலை இரண்டாவது கட்டப்படிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

லியோ படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது விஜய் உடன் இணைந்து அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், திரிஷா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இப்பவே லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு சொல்லி வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய்  சினிமா உலகிற்கு வந்த பிறகு எவ்வளவு சொத்து சேர்த்து உள்ளார் என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி பார்க்கையில் தளபதி விஜயின் சொத்து மதிப்பு சுமார் 410 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஆண்டு வருமானமே கிட்டத்தட்ட 100 கோடியில் இருந்து 120 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

விஜய்க்கு சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் வீடு மற்றும் சொத்துக்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment