இவங்க கூட நடிக்கிறது எல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டம்.! மேடையிலேயே கூறிய விஜய்.! யார் அந்த இரண்டு நடிகர் தெரியுமா

0

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது தான் இணையதளங்களில் படுவேகமாக வைரலாகி வருகிறது, விஜய் பேசியது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ஏனென்றால் விஜய் பேசியது அந்தளவு ரசிகர்களை கவர்ந்து விட்டது.

நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் ஒரு மீம்ஸ் ஒன்று திரையிடப்பட்டது, அந்த மீம்ஸ் சில மாதங்களுக்கு முன்பு ட்ரெண்டான மீம்ஸ் தான். பிரண்ட்ஸ் படத்தில் நேசமணி காட்சி மீம்ஸ் தான் அது. இதை காட்டி இதை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது சார் என தொகுப்பாளினி ரம்யா கேட்டார்.

bigil memes
bigil memes

அதற்கு இளைய தளபதி விஜய் இதை பார்க்கும்போது என்ன தோணுதுன்னா, ஒரு ஆணியும் எனக் கூற ரசிகர்கள் கத்தினார்கள், மேலும் அவர் கூறியதாவது இந்த சீன் எடுக்கும் போது நான் சிரித்துக் கொண்டேதான் இருந்தேன் சூர்யா வந்து  சிரிப்பை கண்ட்ரோல் செய்துவிட்டார், ஆனால் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை, வடிவேல் சார் கூடவும் விவேக் சார் கூடவும் நடிக்கிறது ரொம்ப கடினம் என்னோட ஃபேவரிட் படங்களில் பிரண்ட்ஸ் படமும் ஒன்று என பதிலளித்தார் விஜய்.