TRP – ல் உச்சத்தை தொட விஜய் பட நடிகை களமிறக்கும் “பூவே உனக்காக” சீரியலில்.! யார் அது தெரியுமா.?

சின்னத்திரையில் பல சீரியல்கள் குடும்பங்களை கவர்ந்து சிறப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் மக்கள் பலரின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே  உனக்காக. இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலையில் இருக்கும் ஒரு தொடராகும்.

இதில் ஹீரோவாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் அசீம் பூவேஉனக்காக சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக நடித்து வந்த ராதிகா ப்ரீத்தி சமீபத்தில் தான் மாற்றப்பட்டு அவருக்கு பதில் தற்போது வர்ஷினி என்று பிரபலம் பூவரசி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

ஒரு சீரியலில் மெயின் பில்லர் ஆக நடித்து வரும் நடிகர் நடிகைகள் மாற்றப்பட்டால் அந்த சீரியல் சற்று அடிவாங்கும். ஆனால் பூவே உனக்காக தொடர் தொடர்ந்து டாப் லிஸ்டில் இருந்து வருகின்றன. புது புது ட்விஸ்டுகள் உடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் வரும் ஞாயிறு அன்று 2 மணிக்கு ஒரு மணி நேர சிறப்பு எபிசோடாக ஒளிபரப்பாக உள்ளது.

அதில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு சிறப்பு விருந்தினர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளாராம். 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சோனியா அகர்வால் இந்த சிறப்பு எபிசோடில் கலந்துகொள்ள உள்ளாராம்.

இந்த சீரியலில் அவர் கலந்துகொள்ளும் ப்ரோமோ வீடியோ கூட வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளனர். மேலும் பூவே உனக்காக சீரியலின் ரசிகர்கள் பலரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாக உள்ள இந்த எபிசோடை காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

Leave a Comment