‘கேஜிஎப்’யாஷ் நடிக்கயிருக்கும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கும் விஜய் பட நடிகை.! வெளிவந்த மாஸ் அப்டேட்..

beast-vijay
beast-vijay

நடிகர் யாஷ் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக விஜய் பட நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.  மேலும் ரசிகர்கள் இதனை வைரலாக்குவதோடு மட்டுமல்லாமல் யார் அந்த நடிகை என ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

அதாவது நடிகர் யாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் தான் ‘கேஜிஎஃப் 2’.  இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக வசூல் செய்து பெரும் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படத்தினை தொடர்ந்து யாஷ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தினை பிரபல இயக்குனர் நார்தன் இயக்க இருப்பதாகவும் அந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகர் யாஷ்க்கு ஜோடியாக நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்றும் அப்படி வெளிவந்தால் முதன் முறையாக யாஷ் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் முதல் திரைப்படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

yash
yash

இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே ‘ஜனகனமன’ என்ற தெலுங்கு படத்திலும்’சர்க்கஸ்’ என்ற பாலிவுட் படத்திலும் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.  அதோடு இவர் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்ட ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்க வருகிறார்.