விஜய் பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடிய பிக் பாஸ் தர்ஷன்.! வைரலாகும் வீடியோ

0
vijay
vijay

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ், இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது முதல் சீசனில் இருந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இந்த மூன்றாவது சீஸனில் இல்லை, மூன்றாவது சீஸனில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அதில் ஒருவர் தர்ஷன்.

இவர் 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தார், இவர்தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் என பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்தார்கள், ஆனால் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷன் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அந்த நிகழ்ச்சி விட்டு வெளியே வந்ததும் ஒரு சில பட வாய்ப்புகள் வருகின்றன, ஆனால் தாசனுக்கு முதல் படமே மிகப்பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் அவர் விஜய் நடிப்பில் வெளியான திருமலை திரைப்படத்தில் மிகவும் ஃபேமஸான பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ