செம க்யூட்டாக இருக்கும் தெறி பேபி நைனிகா நெடுநெடுவென வளர்ந்துள்ளார் தற்பொழுது இவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
அட்லி விஜய் கூட்டணியில் உருவாகிய திரைப்படம்தான் தெறி இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது. மேலும் இந்த திரைப்படத்தில் மீனாவின் மகளான நைனிகா நடித்திருப்பார்.

குட்டிப் பெண்ணாக அந்த திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த அவரின் நடிப்பை பார்த்து பல ரசிகர்களும் வியந்து பார்த்தார்கள். அந்த அளவு தனது க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தினார் நைனிகா. தன்னுடைய கியுட்டான பேச்சால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நைனிகா தன்னுடைய அம்மாவை போல் மிகவும் அழகாக இருப்பார்.
கண்ணழகி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் மீனா இவரின் மகள் தான் நைனிகா. நைனிகா தெறி திரைப்படத்தை தொடர்ந்து அப்பாஸ் அமலாபால் நடிப்பில் வெளியாகிய பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் ரசிகர்கள்தான் நல்ல விமர்சனங்களை பெற்று வைரலானது.
இந்தநிலையில் நைனிகா தற்பொழுது மடமடவென வளர்ந்துவிட்டார் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன அதை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.