விஜய், விக்ரம் படங்களில் நடித்த பிரபலம் தான் பிக்பாஸ் வைல்ட் கார்டு மூலம் உள்ளே வரப்போறார்.? யார் அது தெரியுமா.?

சின்னத்திரையில் பிக் பாஸ் சீசன் 5 தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டு தற்போது 5 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் மீதம் 13 போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதில் ஒவ்வொரு வாரமும் புதுப்புது வித்தியாசமான டாஸ்க்குகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தற்பொழுது இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ராஜீ, சிபி, அக்ஷரா, இமான் அண்ணாச்சி, அபிநய், மதுமிதா, தாமரை செல்வி போன்றவர்கள் நாமினேட் ஆனார்கள். இதில் நேற்று நடந்த எபிசோடில் மக்களின் அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் வகிக்கும் ராஜி இந்த வார எவிக்ஷனில் இருந்து சேவ் ஆகிவிட்டார்.

மேலும் இன்றைய எபிசோடில் மதுமிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இப்படி சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த நான்கு சீசன்களிளுமே நிகழ்ச்சி தொடங்கப்பட்டு முப்பது அல்லது நாற்பது எபிசோடுகள் முடிவடைந்த நிலையில் வைல்டுகார்ட் என்ட்ரி ஆக சில பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.

அப்படி இந்த சீசன் தற்போது 40 நாட்கள் முடிந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்ட் என்ட்ரி குறித்து தகவல் வெளிவந்துள்ளது. பிரபல சின்னத்திரை சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம், கண்மணி போன்ற சீரியல்களின்  நடிகர் மற்றும் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து வந்த விஜய்யின் நெருங்கிய நண்பனான சஞ்சீவ் வெங்கட்.

sanjeev
sanjeev

இந்த சீசனில் நுழையப் போவதாக தகவல்கள் பரவி வருகிறது மற்றும் இது குறித்த பேச்சுவார்த்தையும் விஜய் டிவியில் இருந்து சஞ்சீவுடன் பேசி முடித்து விட்டனர் எனவும் கூறப்படுகிறது. எனினும் அதிகாரபூர்வமான தகவல்கள் என்னும் தற்போது வரையிலும் வெளிவரவில்லை.

Leave a Comment