ஒரே ஒரு படம் எடுத்த இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் தளபதி 65 சுவாரசிய தகவல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்றாலே கைகோர்த்த இயக்குனருடன் தான் கூட்டணி வைப்பார்கள், ஆனால் இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் உள்ள எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடம் அதிகமாகிவிட்டது, அதனால் இளம் இயக்குனர்கள் களத்தில் இறங்கி மாஸ் காட்டி வருகிறார்கள் தமிழ் சினிமாவில்.

அந்த வகையில் வினோத், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் நரேன், கார்த்தி சுப்புராஜ் ஆகிய இயக்குனர்களை உதாரணமாக சொல்லலாம், மேலும் இவர்கள் வித்தியாசமான திரைக்கதையை கையாளுவதால் இவர்களுடன் முன்னணி நடிகர்கள் கூட்டணி வைக்க தொடங்கிவிட்டார்கள்.

தற்பொழுது தல அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார், மேலும் அருண் விஜய் கார்த்திக் நரேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இது புதிதாக  இயக்குனராக மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கு பச்சை கொடி என்றும் கூறலாம்.

இந்த நிலையில் தளபதி விஜய் மீண்டும் தன்னுடைய 65வது படத்தை இளம் இயக்குனருடன் கை கோர்த்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது, ஆம் ராப் பாடகர் மற்றும் நடிகருமான அருண் ராஜா காமராஜ் தான் தளபதி 65 திரைப்படத்தின் இயக்குனர் ஆவார்., இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய மான் கராத்தே திரைப்படத்தில் நெருப்பு குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

இவரை நெருப்பு குமார் என்றால் தான் அனைவருக்கும் தெரியும். இவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிய கனா திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment