அடுத்த படத்திற்கு வெங்கட் பிரபு உடன் இணைந்த விஜய்.! ரசிகர்களுக்கு அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

தமிழ் திரை உலகில் பல வருடங்களாக பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்ட நடிகர்களில் ஒருவர்தான் விஜய் இவர் தற்பொழுது வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் இவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக அமைந்து விடும் என பல பிரபலங்களும் கூறி வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பார் என தகவல் வெளிவந்தது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணி பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆம் ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது மேலும் இதனை நடிகர் விஜயின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளிவரும் எனவும் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

vijay
vijay

அது மட்டுமல்லாமல் தனது ரசிகர்களுக்காக நடிகர் விஜய் அவர்களே தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Comment