பிரபல நடிகையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய் – சூர்யா..!

0
vijay-and-surya
vijay-and-surya

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஹீரோக்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் சூர்யா..  அண்மை காலமாக இவர்கள் இருவரும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் இப்பொழுது  நடிகர் சூர்யா தற்போது பாலாவுடன் கை போட்டு வணங்கான், சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து சூர்யா 42 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மறுபக்கம் தளபதி விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக அடுத்து வருகிறார் படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக  ரீலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இவர்கள் இருவரும் படங்களின் மூலமும் மோதிக்கொண்டாலும் நிஜத்தில் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளனர்.

அந்த வகையில் நேருக்கு நேர், பிரண்ட்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது. இரண்டு பேரும் இப்பொழுதும் நல்ல நட்புடன் இருக்கின்றனர்  நல்ல கதைகள் கிடைத்தால் இரண்டு பேரும் சேர்ந்து நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு புகைப்படம் ஒன்று வெளிவந்து பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

நடிகர் சூர்யா அசினுடன் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்கள் தான் அதேபோல விஜய்க்கும் அசனும் நடித்தப் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி படங்கள் தான்.. இப்படி இருக்கின்ற நிலையில்   இந்த மூன்று பேரும் சேர்ந்து  எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று  இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது.

புகைப்படத்தை உற்று நோக்கி பார்க்கும் போது தான் தெரிகிறது இது இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் அல்ல.. எடிட் செய்துள்ளனர் என்று தெரிய வருகிறது. இருப்பினும் அந்த புகைப்படம் பார்ப்பதற்கு நன்றாக இருப்பதால் ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்டுகளையும் கொடுத்து வருகிறனர்.