நீங்க எதுக்கு சுறா திரைப் படத்தில் நடித்தீர்கள் இயக்குனரின் கேள்வியால் மனம் நொந்த விஜய்.!

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும்  முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் இவர் 2010 ஆம் ஆண்டு எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் சுறா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விஜய்யின் ஐம்பதாவது திரைப்படம், அதனால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.

மேலும் சுறா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் வடிவேலு ராதாரவி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள், ஆனால் சுறா திரைப்படம் மிகப்பெரிய தோல்வி திரைப்படமாக அமைந்தது, இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏன் விஜய் கூட இந்த அளவு தோல்வி அடைந்திருக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார், இந்தநிலையில் இயக்குனரும் நடிகருமான மனோபாலா சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் விஜய்யிடம் நேரடியாக சுறா படத்தில் ஏன் நடித்தீர்கள் எனக் கேட்டதாகவும் அதற்கு விஜய் கடல் ஓபனிங் என இயக்குனர் பெரிய அளவில் கதை ஆரம்பித்ததால் அதை நம்பி ஏமாந்து விட்டதாகவும் கூறி வருத்தப்பட்டார்.

சுராவின் தோல்விக்குப் பிறகு விஜய்யின் அசுர வளர்ச்சி வேற லெவல் இல் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், தற்போது விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

Leave a Comment