கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க விஜய் ரொம்ப கஷ்டப்பட்டாரு.. வேதனையுடன் உண்மையை சொன்ன குஷ்பூ.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப திரைப்படமாக உருவாகி உள்ளது இருப்பினும் இதில் ஆக்சன் காமெடி போன்றவை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறது.

வாரிசு படம்  வருகின்ற 11ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக வாரிசு படத்தில் நடித்த பல முக்கிய பிரபலங்களும் இயக்குனரும் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் தற்பொழுது நடிகை குஷ்பூ பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

விஜய் குறித்தும் வாரிசு திரைப்படம் குறித்தும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் அதில் ஒன்றாக தளபதி விஜய் பற்றியும் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் சொன்னது. தளபதி விஜய் வாரிசு படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்துள்ளார் என கூறினார் மேலும் போக போக விவரமாக சொல்ல ஆரம்பித்தார்

ஆம் குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நிறைய பேர் நடித்து கொண்டிருந்த நேரம். அந்த சமயத்தில் விஜய்க்கு உடம்பு சரியில்லை காய்ச்சல் 103 டிகிரி வரை அடித்தது இருப்பினும் தனது உடலைக் கூட அவர் பொருட்படுத்தாமல் அந்த சமயத்திலும் வந்து நடித்தார்.

அவ்வப்பொழுது அங்கு ஒரு ஓரமாக படுத்திருப்பார் அவரது காட்சி வரும் பொழுது வந்து நடிப்பார் இப்படி அந்த கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்டது படபிடிப்பு அனைத்தும் முடித்த பிறகு ஹாஸ்பிடலுக்கு சென்று அட்மிட் ஆனார் என கூறியுள்ளார் குஷ்பூ. இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version