விஜய், சிம்புவின் நடிப்பு திறமையை பார்த்து அன்று நான் சொன்னது இப்போ நடக்குது – பெண் இயக்குனர் பேட்டி.!

சினிமா உலகில் வாரிசு நடிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த பழக்கம் இப்பொழுது மட்டும் தொடங்கவில்லை ஆரம்ப கட்டத்தில் இருந்தே இருந்து வருகின்றன அந்த வகையில் சிம்பு விஜய் போன்ற போன்ற நடிகர்கள் சினிமாவில் இளம் வயதிலேயே அறிமுகமாகி நடித்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் இவர்களது அப்பா சினிமாவில் பிரபலமாக திகழ்ந்து வந்ததால் சிம்பு விஜய்க்கு ஈசியாக வாய்ப்பு கிடைத்துள்ளன. இப்படி சுலபமாக வாய்ப்பு கிடைத்தாலும் அந்த வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள தனது திறமையை ஒவ்வொரு படத்திலும் வெளிகாட்டி தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிம்பு மற்றும் விஜய் இருவரும் சினிமாவில் ஒரு பெரிய இடத்திற்கு வருவார்கள் என்று அப்பவே கணித்துக் கூறியுள்ளார் கிருத்திகா உதயநிதி. ஆம் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி சிம்பு ஹீரோவாக சொன்னா தான் காதலா என்ற படத்தில் நடித்து அறிமுகமானார்.

அந்த படத்தை பார்த்த கிருத்திகா உதயநிதி அப்போதே அவர்களது தோழியிடம் சிம்பு ஒரு பெரிய இடத்தை பிடிப்பார் எனக் கூறியுள்ளார். அவர் சொன்னது போலவே சிம்பு தற்போது சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இதைப்போல் கிருத்திகா உதயநிதி விஜய்யின் படத்தை பார்த்தும் விஜயும் தமிழ் சினிமாவில் தொட முடியாத ஒரு உச்சத்தை எட்டுவார் என கூறியிருந்தாராம்.

அதுபோல் தற்போது விஜயும் தமிழ் சினிமா திரையுலகமே கொண்டாடும் ஒரு நடிகராக இருந்து வருகிறார்.  இதனை கிருத்திகா உதயநிதி அவர் தயாரித்த வெப் சீரிஸ் படமான பேப்பர் ராக்கெட் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறி பெருமிதம் கொண்டார்.

Leave a Comment