இவ்வளவு கும்பலிலும் நம்ம ஆளு அப்படி தொக்கா தெரிகிறார் பார்த்தீர்களா.! இணையதளத்தில் வைரலாக விஜய் மகனின் தற்போதைய புகைப்படம்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதேபோல் இவர் சங்கீதா என்ற ரசிகையை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஜாக்சன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டியது ஊரடங்கு காரணமாக திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போகிறது.

விஜய்யின் மகன் விஜய் போலவே மிகவும் அமைதியாக இருப்பார், அதேபோல் விஜய்யின் மகன் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார், போக்கிரி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யின் மகன் நடனமாடியுள்ளார் அதுமட்டுமில்லாமல் தெறி திரைப்படத்தில் அவரின் மகள் ஒரு சில காட்சியில் தோன்றி இருப்பார்.

விஜய்யின் மகன் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டில் சினிமா துறையை சார்ந்த படிப்பை படித்து வருகிறார், விரைவில் வாரிசு நடிகராக சினிமாவில் களமிறங்குவார் என தெரிகிறது, அது மட்டுமில்லாமல் சினிமாவில் ஹீரோவாக அல்லது இயக்குனராகவும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் மகன் தன்னுடைய நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட குழு புகைப்படம் ஒன்று இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது, இந்த புகைப்படத்தை பார்த்த உடன் விஜய்யின் மகன் எங்கு இருக்கிறான் என ஈசியாக கண்டுபிடித்துவிட்டார்கள் ரசிகர்கள்.

மேலும் விஜய்யின் மகன் விஜய் போலவே சைலண்டாக இருக்கிறார் என கருத்து தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Jackson-Sanjay
Jackson-Sanjay
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment