விஜய் சிவகார்த்திகேயன் படங்களில் நடித்த நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு.! முருகனின் மருமகன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

0
lalitha-jewellery-theft
lalitha-jewellery-theft

லலிதா ஜூவல்லரி யில் கொள்ளையடித்த முருகன் பெங்களூரில் சரணடைந்தான், இந்த நிலையில் முருகனிடம் தமிழ்நாடு போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது, அதுமட்டுமில்லாமல் அவரது மருமகன் சுரேஷ் அவர்களையும் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2ஆம் தேதி அதிகாலையில் திருச்சி லலிதா ஜுவல்லரி சுவரில் துளைபோட்டு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள தங்கத்தையும் வைர நகைகளையும் திருவாரூர் முருகன் தலைமையிலான திருட்டு கும்பல் கொள்ளையடித்து. இந்த கொள்ளையில் மணிகண்டன் மற்றும் சுரேஷ் உள்ளிட்டோர் பலர் கைது செய்யப்பட்டார்கள். கொள்ளையில் முக்கியக் குற்றவாளியான முருகன் பெங்களூரில் சரணடைந்தார்.

இந்த நிலையில் முருகனின் மருமகன் சுரேஷ் தற்பொழுது போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன, அதில் அவர் கூறியதாவது எனது மாமா முருகன் என்னை கதாநாயகனாக வைத்து சினிமா படம் எடுக்கத் திட்டமிட்டார் அதன்படி 2013 ஆம் ஆண்டு தெலுங்கில் ஆத்மா என்ற படத்தை எடுக்கத் தொடங்கி 45 நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் பணம் இல்லாமல் படம் பாதியில் நின்றது.

அதன் பிறகு தெலுங்கில் மான்சா என்ற படத்தை எடுத்தோம் அந்த படம் முழுவதும் எடுக்கப்பட்டது கதாநாயகியாக நடித்த பிரபல நடிகைக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது ஆனால் முன்பணமாக 6 லட்சம் தான் கொடுக்கப்பட்டது, மீதித் தொகை கொடுக்க முடியாமல் போனதால் அந்த நடிகை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் இதனால் முழுவதும் எடுத்த படம் ரிலீஸ் ஆகாமல் போனது.

இதனை தொடர்ந்து திருச்சி டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சில மாதங்களுக்கு முன்பு சுவரில் துளைபோட்டு நகை பணத்தை மாம முருகன் திட்டத்தின்படி கொள்ளையடித்தோம், பின்பு தமிழில் படம் எடுக்க திட்டம் தீட்டினோம் அதனால் முன்னணி கதாநாயகர்களுடன் நாயகியாக நடித்த பல வெற்றிப்படங்களை தந்த பிரபல நடிகையை ஐதராபாத்தில் நானும் என் மாமாவும் சந்தித்தோம்.

அவரிடம் கால்ஷீட் கேட்டபோது தான் தற்போது பல படங்களில் நடித்து வருவதால் பிஸியாக இருப்பதாக கூறினார் அப்பொழுது நாங்கள் தங்க நகை கடை வைத்து நடத்தி வருகிறோம், நடிகையும் ஆர்வமாக அப்படியா என கேட்டார் பின்னர் மாமா வங்கியில் கொள்ளையடித்த நகைகளை அந்த நடிகைக்கு பரிசாக வழங்கினார் அதை அந்த நடிகையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். மேலும் கொள்ளையடித்த பணத்தில் நானும் என் மாமாவும் தமிழ் மற்றும் தெலுங்கில் பட நடிகையுடன் உல்லாசமாக இருந்துள்ளோம். என அதிர்ச்சித் தகவலை சுரேஷ் கூறினார்.

அந்த நடிகை வேறுயாருமில்லை விஜய் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இந்த வாரிசு நடிகை நடித்துள்ளாராம். தற்போது அந்த நடிகையுடன் போலீசார் திட்டமிட்டுள்ளார்.