தளபதி விஜய் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுக்க சிறந்த இயக்குனரிடம் கதை முழுவதையும் கேட்டு நன்கு ஆராய்ந்து அந்த படத்தில் நடிப்பது அவரது ஸ்டைல் அதனால் தான் அவரது படங்கள் ஒவ்வொன்றும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெறும்.
அந்த வகையில் விஜயின் 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றதோடு வசூலிலும் குறைந்த அளவே உள்ளது. இருப்பினும் தனது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் விஜய்.
அந்த வகையில் தெலுங்கு பக்கம் முதன் முறையாக அடி எடுத்து வைத்து தனது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் கேரியரில் மிக முக்கிய படமாக சர்கார் படம் அமைந்தது.
இந்த படத்தை தனக்கே உரிய பாணியில் ஏ ஆர் முருகதாஸ் எடுத்திருப்பார். இந்த படத்தில் கூகுள் சிஇஓ வாக விஜய் நடித்த இந்த படம் அரசியல் மற்றும் சென்டிமென்ட் ஆக்ஷன் படமாக இருந்ததால் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஓடியது.
இந்த படத்தில் ஒரு பாடலில் தளபதி விஜய் இரண்டு வெளிநாட்டுப் பெண்களுடன் உட்கார்ந்து இருப்பார் அப்போது எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோ இணைய தள பக்கத்தில் தற்பொழுது பகிரப்பட்ட வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த மேக்கிங் வீடியோவை..
https://twitter.com/ImChandruJc/status/1519007158225960961?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1519007158225960961%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fviduppu.com%2Farticle%2Fvijay-with-two-girls-in-car-1651052176