சிங்க பெண்ணே பாடலை பாராட்டிய மெர்சல் தயாரிப்பாளர்.! என்ன சொன்னார் தெரியுமா.?

0
bigil_vijay
bigil_vijay

bigil : அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது, இந்த திரைபடத்தில் விஜய் கால்பந்து கோச்சராக நடித்து வருகிறார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட வருடங்களுக்கு பிறகு நயன்தாரா நடித்துள்ளார்.

பிகில் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்து வருகிறார், இந்த நிலையில் படத்திலிருந்து சிங்க பெண்ணே என்ற பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது, இந்த பாடலை கேட்ட பல சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

மேலும் சிங்க பெண்ணே பாடல் பெண்களின் வாழ்க்கையை குறித்து பாடப்பட்டுள்ளது, இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு விஜய்-அட்லி கூட்டணி உருவாக்கிய மெர்சல் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தனது பங்கிற்கு அவரும் பாடலை பாராட்டி புதிய புகைப்படத்துடன் ட்வீட் ஒன்றை தட்டியுள்ளார்.