வாரிசு திரைப்படத்தில் ஆடைகளில் கஞ்சதனத்தை காட்டும் விஜய்.! காஸ்டியூம் டிசைனர்களுக்கு ஆர்டர்..

0
vaarisu 1
vaarisu 1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இந்த திரைப்படத்தினை வம்சி இயக்குகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் வாரிசு திரைப்படத்தின் சூட்டிங் என்பது எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில் இதனால் ரசிகர்கள் மிகவும் கோபமடைந்து வந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இயக்குனர் வம்சி படப்பிடிப்புக்கு போன் அனுமதி இல்ல என கரராக கூறியுள்ளாராம்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது விஜய் மிகவும் கஞ்சத்தனமாக இருந்து வருகிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது பொதுவாக ஒரு கதாநாயகன் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த டிரஸ் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும் மேலும் விதவிதமான டிரஸ்கள் அணிவது வழக்கமாக இருக்கிறது.

மேலும் ஒரு சட்டை பார்ப்பதற்கு நார்மலாக இருந்தாலும் கூட அது உன்னுடைய விலை உயர்வாக இருக்கும் இப்படிப்பட்ட நிலையில் வாரிசு திரைப்படத்தில் காஸ்ட்யூம் டிசைனர்கள் தயாரித்து தரும் மெலிசான டிரஸ்களே விஜய்க்கு பிடித்திருக்கிறதாம். அதாவது சமீபத்தில் வாரிசு திரைப்படத்தில் நடிப்பதற்காக விஜயின் காஸ்டியூம் டிசைனர்கள் டிரஸ் எடுப்பதற்காக சென்று உள்ளார்கள் இதனை தெரிந்து கொண்ட விஜய் 500 முதல் 1000 ரூபாய் ஒரு சட்டையை எடுக்க வேண்டும் என கூறியுள்ளாராம்.

இவ்வாறு முன்னணி நடிகராக இருந்து வரும் இவர் இவ்வளவு குறைவான டிரஸ் போடுவது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது இவ்வளவு எளிமையானவராக விஜய் இருக்கிறார் என பெருமைப்படுகிறார்கள்.ஒருபுறம் வாரிசு திரைப்படத்தின் பட்ஜெட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக குறைவான ஆடைகளை அணிகிறார் எனவும் கூறப்பட்டு வருகிறது.