ஐயய்யோ விஜய் கூட போட்டியா வேண்டவே வேண்டாம் ஒதுங்கி கொண்ட விஜய் சேதுபதி.!

0
vijay
vijay

விஜய் சேதுபதி வருடத்திற்கு ஆறு ஏழு திரைப்படங்களுக்கும் மேல் நடித்த ரிலீஸ் செய்வார் அந்த வகையில் தற்போது நடித்துள்ள சங்கத் தமிழன் திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை என படக்குழு தெரிவித்துள்ளது.

சங்கத்தமிழன் படத்தின் டீசர் மற்றும் கமலா என்ற பாடல் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தை வாலு  மற்றும் ஸ்கெட்ச்  படங்களை இயக்கிய விஜய் சந்தர் தான் இந்தத் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

வருகிற தீபாவளிக்கு விஜயின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி  திரைப்படம் வெளியாக இருப்பது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள், இந்த திரைப்படத்தின் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ரிலீசாகும் என சமீபத்தில் தகவல் வெளியானது.

அதனால் விஜய் ரசிகர்கள் பிகில் படத்துடன் மோத போகிறாரா விஜய்சேதுபதி என வருத்தத்தில் இருந்தார்கள் ஆனால் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றத்தை பார்த்து சந்தோஷத்தில் இருக்கிறார்கள், சங்கத் தமிழன் திரைப்படம் தீபாவளிக்கு முன்னரே அக்டோபர் 4ம் தேதி ரிலீஸ் ஆகிறது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.