நான் நடிகனாக இருந்தால் போதும்.! அஜித்திற்கு கொக்கி போடும் விஜய் சேதுபதி..

தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து முன்னணி நடிகர்களின் அந்தஸ்தை பிடித்தவர் விஜய் சேதுபதி, இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி நடிகராக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து துவம்சம் செய்து வருகிறார்.

இதன் நிலையில் விஜய் சேதுபதி மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப் படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன, விஜய் சேதுபதி வில்லனாக முதன்முதலில் ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார், மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கி வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் நெய்வேலி பகுதியில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் விஜய் சேதுபதி அடுத்ததாக அஜித்துக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார், அதனால் அஜித் படத்தில் வில்லனாக நடிப்பார் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது, விஜய் சேதுபதி விகடன் விருது நிகழ்ச்சியில் ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறி மாறி நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு விஜய் சேதுபதி எனக்கு டாப் ஹீரோ என்ற இமேஜ் தேவையில்லை இமேஜ் என்பது மிக சிறியது, அதற்குள் அடைபடுவதற்கு விரும்பவில்லை, நான் நடிகனாக இருப்பதே எனக்கு பெரிய வரம் என கூறினார்.

Leave a Comment