விஜய் சேதுபதிக்கு பிடிக்காத படம் இந்த மாதிரி தான் இருக்கும்.!அவரே கூறிய தகவல்.

0

ஹீரோவாக அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்த விஜய் சேதுபதி தற்போது தனது சிறந்த நடிப்பினால் வில்லனாகவும் கலக்கி வருகிறார். இவரின் சிறந்த நடிப்பினால் தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகளை பெற்று  வருகிறார்.

அதோடு இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களும் தொடர்ந்து இந்திய அளவில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரத்திற்காக தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு வெற்றியை சந்தித்து வந்த இவர் மேலும் விஜய் நடிப்பில் கடைசியாக பொங்கலை முன்னிட்டு வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக புதிய அவதாரம் எடுத்திருந்தார். இத்திரைப்படத்தில் இவர் பவானி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்ததால் தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களில் நடிப்பதற்காக வரிசைகட்டி  வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் உப்பண்ணா திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தால் இத்திரைப்படம் சில நாட்களிலேயே கோடிக்கணக்கில் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது இவர் லாபம் உள்ளிட்ட இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு வெள்ளித்திரையில் ஹீரோவாக கலக்கி வரும் இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி உள்ளார்.ஆம், பிரபல சன் டிவியில் மாஸ்டர் செப் என்ற சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி சமீப பேட்டி ஒன்றில் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதாவது, இவருக்கு இங்கு உள்ள படங்களை பார்த்து ரசித்து அது குறித்து பேசுவது தான் மிகவும் பிடிக்கும். மத்தபடி  Subtitle கூடிய உலக சினிமா படங்களை புரிந்து கொள்ள முடியாது என்பதால் அந்த மாதிரியான திரைப்படங்களை பார்க்க மாட்டாராம்.