5 மொழி 150 நாடுகளில் வெளியாகும் விஜய்சேதுபதியின் திரைப்படம்.! இனி வேற லெவல் தான்

0

vijay sethupathy movie:தமிழ் சினிமாவில் சின்னத்திரை மூலம் அறிமுகமாகி வில்லனாக நடித்து பின்பு கதாநாயகனாக பல கிராமத்து படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர்.

இவர் படத்திற்காக தனது முழு கெட்டப்பையும் மாற்றிக் கொள்வார். இவர் தற்போது தமிழில் வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தெலுங்கு திரைப்படங்களிலும்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். மேலும் தற்போது இவர் கைவசம் 5 திரைப்படங்களுக்கு மேல் உள்ளது என்பது தெரியவருகிறது. கே ஜே ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும்  க/பெ ரணசிங்கம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டியது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திலிருந்து வெளியான அழகிய சிரிக்கி பாடல் ரசிகர்களை கவரும்படி இருந்தது.

க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் உரிமத்தை ஜி பிளக்ஸ் குழுமம் பெற்றுள்ளதாக விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 150 நாடுகளில் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.