தோல்விகளால் விஜய் சேதுபதி படத்திற்கு வந்த பெரும் சிக்கல்.! வருத்தத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி இவர்  நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது அது மட்டுமில்லாமல் ஒரே வருடத்தில் அரை டஜன் படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்து வெற்றி கண்டு வந்தவர் ஆனால் சமீபகாலமாக விஜய் சேதுபதி திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்தநிலையில் எப்படியாவது ஹிட் திரைப்படத்தை கொடுத்துவிட வேண்டும் என விஜய் சேதுபதி பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம்தான் மாமனிதன் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது அதற்கு காரணம் சீனு ராமசாமி இயக்கி உள்ளார் என்பது தான்.

இந்த திரைப்படம் பல பிரச்சினைகளின் காரணமாக இன்னும் வெளியே வராமல் இருந்து வருகிறது அந்த வகையில் இந்த திரைப்படம் வருகிற மே மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என டிரைலரை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள் ஆனால் பீஸ்ட் திரைப்படம் ஏற்கனவே வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றதால்  படக்குழு கொஞ்சம் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை மே 10 ஆம் தேதியிலிருந்து ஜூன் 24-ஆம் தேதி தள்ளி வைக்கப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவல்கள் விஜய் சேதுபதி ரசிகர்களிடையே கவலையை கொடுத்துள்ளது.

ஏனென்றால் விஜய் சேதுபதியை நீண்ட காலமாக திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் விஜய்சேதுபதியின் படம் எப்படி தள்ளிப்போய் கொண்டே இருப்பதால் கொஞ்சம் கவலையில் இருக்கிறார்கள்.

இதற்கு முன் வெளியாகிய விஜய்சேதுபதி படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் படக்குழு அதிருப்தியில் இருக்கிறார்கள்.

Leave a Comment