விஜய் சேதுபதியின் மாஸ்டர் செஃப் டீசர் இதோ!! வைரலாகும் வீடியோ…

0

தற்பொழுது உள்ள சில முன்னணி தொலைக்காட்சிகள் ரியாலிட்டி ஷோக்களை மாற்றி மாற்றி காப்பி அடித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் வித்தியாசமான ரசிகர்களை கவரும் வகையில் காமெடியை மையமாக வைத்து விஜய் டிவி பல நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ரசிகர்கள் விரும்பும் வகையில் வெளியான ஒரு ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.எனவே இதற்கு போட்டியாக சன் டிவியும் சமையல் நிகழ்ச்சி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனால் இவர்கள் விஜய் டிவியை ஓவர்டேக் செய்ய வேண்டும் என்பதற்காகவும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற வேண்டும் என்பதற்காகவும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை மஸ்டர் செப் என்று நிகழ்ச்சிக்கு பெயர் வைத்து அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் மாஸ்டர் செப் நிகழ்ச்சிக்கான டீசர் ஒன்றை சன்டிவி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் மூன்றில் சமையல் வல்லுனர்களையும் அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.  அதாவது ஆர்த்தி சம்பத், ஹரிஷ் ராவ் மற்றும் கௌசிக் ஆகியோர்கள் நடுவர்களாக பணியாற்ற உள்ளார்கள்.

எனவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற வேண்டும் என்பதற்காக ஹோலிவுட்டு ரேஞ்சுக்கு இந்நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.  இதோ அந்த டீசர்.