தியேட்டரில் வெளியாகும் விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படம்.! பேனர் வைத்த கொண்டாடும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் லாபம். இந்தத் திரைப்படத்தை இயக்குனர் ஜனநாதன் அவர்கள் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சுருதி ஹாசன், ஜெகபதி பாபு, தன்சிகா, மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒரு திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் கோரணா இரண்டாவது அலையின் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் லாபம் திரைப்படம் வெளிவராமல் காத்திருந்தது. தற்போது தியேட்டர்களை திறக்க கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டது.

இருந்தாலும் தியேட்டர்கள் முழுவதுமாக திறக்கப்படவில்லை. சில தியேட்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டது அதிலும் 50 சதவீத இருகைகளுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர் இருப்பினும் தியேட்டர்களில் மக்கள் வரவில்லை.

முன்னணி நடிகர்களின் திரைப்படம் தியேட்டர்களில் வெளியான மட்டுமே ரசிகர்களும் மற்றும் மக்களும் தியேட்டருக்கு வருவார்கள் என எதிர் பார்த்தனர்.  அந்த வகையில் அடுத்த வாரம் செப்டம்பர் 9ஆம் தேதி விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படம் தியேட்டரில் வெளியாகிறது.

இதனைக் குறித்து ரசிகர்கள் லாபம் படத்தில் போஸ்டர் மற்றும் பேனர்களை தியேட்டர்கள் முன்பு வைத்து கொண்டாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்கள்  வர ஆரம்பித்து விட்டால் மக்கள் கூட்டமும் ரசிகர்களிடமும் தியேட்டர்கள் காலகட்டம் என கூறப்படுகின்றது. மேலும் சில பல புதிய திரைப்படங்கள் வெளியீடு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

laabam
laabam

தற்போது விஜய் சேதுபதி அவர்கள் காத்துவாக்குல ரெண்டு காதல், துக்ளக் தர்பார் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப் படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment