அம்மாடியோ இத்தனை கோடியா.. பிக்பாஸ் 8க்காக கை நிறைய விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்

விஜய் டிவியில் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படும் பிக் பாஸ் சீசன் 8 இப்போது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. இதற்கு சில காரணங்கள் இருக்கிறது. முதலாவது மிகவும் அதிருப்தியைப் பெற்ற கமல் நிகழ்ச்சியை விட்டு விலகிவிட்டார்.

அடுத்து மக்களின் நாயகனாக வளம் வந்த விஜய் சேதுபதி புது தொகுப்பாளராக என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதுவும் மக்களின் மனநிலையையும் கருத்துக்களையும் உள்வாங்கிய பிறகே இவர் தன் பயணத்தை தொடங்க உள்ளார்.

இதை ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ரசிகர்கள் மக்களின் பிரதிநிதியாக கலக்க வேண்டும் என அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இந்த நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி நிறைய ஆலோசனைகளை பெற்று வருகிறாராம்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக இவருக்கு பேசப்பட்ட சம்பளம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த சீசனுக்காக அவர் 50 கோடி வரை சம்பளம் வாங்க இருக்கிறார். முன்னதாக கமலுக்கு 120 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டது.

அதை வைத்து பார்க்கும் போது விஜய் சேதுபதிக்கு குறைவு தான். இருந்தாலும் அவருடைய அறிமுக சீசன் எந்த அளவுக்கு டிஆர்பி யை உயர்த்துகிறது என்பதை பொறுத்து மேலும் அதிகரிக்கும் என்கின்றனர். நிச்சயம் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.