விஜய் சேதுபதியின் “லாபம்” படம்.! இவங்களுக்கு மட்டும் தான் லாபம்.! மத்தவங்களுக்கு நஷ்டம் – வெளிவரும் தகவல்.

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி இவர் ஹீரோ, வில்லன் என சிறப்பான கதை அம்சத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க மேலும் இவருக்கு மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி நடிக்கிறார்.

இருப்பினும் சமீப காலமாக இவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் தோல்வியை சந்தித்து உள்ளன. இதனால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர். விஜய் சேதுபதி சமீபகாலமாக சம்பளத்தை பற்றி மட்டும் யோசிக்கிறரே தவிர கதையை சரியாக கவனிக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது அதனால்தான் அவர் படங்கள் பெரிதும் தோல்வி அடைகின்றன என கூறுகின்றனர்.

அதற்கேற்றார்போல சமீபத்தில் வெளியான விஜய்சேதுபதி திரைப்படங்களான லாபம், துக்ளக், தர்பார், சேதுபதி, அனபெல் ஆகிய திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும்படி கூட லாபத்தை பார்க்காமல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளன. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தற்போது செம கோபத்தில் இருக்கின்றனர்.

மேலும் விஜய் சேதுபதி மேல் வைத்த நம்பிக்கை குறைந்துள்ளதாகவும் தற்போது கூறுகின்றனர். லாபம் திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 21 கோடி தானாம். அதில் விஜய் சேதுபதியின் சம்பளம் 10 கோடி. சுருதி ஹாசனின் சம்பளம் ஒரு கோடி. ஆனால் தயாரிப்பாளர் படத்தை விற்றதோ 22 கோடி தானாம்.

இதன் மூலம் லாபம் திரைப்படம் சம்பாதித்த பணமே ஒரு கூடிய தானம். இந்த திரைப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் அனைவருக்குமே லாபம் கிடைக்கவில்லை எனக் கூறி வருகின்றனர்.