காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய கெட்டப்.!வைரலாகும் புகைப்படம்.!

வெள்ளித்திரையில் கதாநாயகனாகவும்,வில்லனாகவும் நிறைய திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இவர் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து தற்போது வில்லனாக பல படங்களில் நடித்துவருகிறார்.

முதலில் ரஜினி நடித்த பேட்டை திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் அதையடுத்து சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு எதிரியாக நடித்து அசத்தியிருப்பார் அந்த திரைப்படம் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் அளித்தது.

மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,சமந்தா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துவருகிறார்கள்.

விஜய் சேதுபதி இந்த திரைப்படத்திற்கு முன்பே இதே இயக்குனர் இயக்கிய நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்து இருப்பார் அந்த திரைப்படத்தில் நயன்தாராவும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இந்நிலையில் சமூக வலைதள பக்கங்களில் விஜய்சேதுபதி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது அந்த புகைப்படம் விஜய்சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் வெளியாகியுள்ளது.காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி இப்படிதான் நடிக்கிறார் என்ற புகைப்படம் போல் இருக்கிறது.

தற்போது இந்த புகைப்படம் இவரது ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

இதோ அந்த புகைப்படம்.

vijay sethupathi
vijay sethupathi

Leave a Comment