விஜய் சேதுபதியின் சினிமா பயணத்தை மாற்ற போகும் புதிய படங்கள்.? குழப்பத்தில் மண்டையை பிச்சிக்கும் மக்கள் செல்வன்.!

நடிகர் விஜய் சேதுபதி சினிமா உலகில் முதலில் வில்லனுக்கு அடியால் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தலை காட்டி வந்த இவருக்கு தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி பிரபலமடைந்த பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைத்தது.

தற்பொழுது தமிழ் சினிமா உலகில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோ வில்லன் என நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக கடைசியாக மாமனிதன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும் வசூல் ரீதியாக குறைந்தது.

விஜய் சேதுபதி அண்மைக்காலமாக ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும்படி பெரிய வசூல் வேட்டை நடத்தவில்லை. அவர் வில்லனாக அல்லது குணச்சித்திர கதாபாத்திரங்களில் வந்து போனால் அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக மாறுகின்றன.

அந்த வகையில் விஜயின் மாஸ்டர், கமலின் விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக மிரட்டினார் அந்த படங்கள் இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்பொழுது வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் இந்த படமும் வெற்றி படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்பொழுது விஜய் சேதுபதிக்கு ஹீரோவாக நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைக்கிறதா என்றால் குறைவு ஆனால் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் குவிந்து வருகிறது விக்ரம் படத்தை தொடர்ந்து கமலின் இந்தியன் 2 மற்றும் தேவர்மகன் 2 படத்தில் கூட விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறதாம்.

மக்கள் தற்பொழுது விஜய் சேதுபதியை வில்லனாகவே பார்க்கின்றனர் அதை நன்கு உணர்ந்து தயாரிப்பாளர்கள் இயக்குனர்களும் விஜய் சேதுபதியை வில்லனாக கமிட் செய்ய போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர் இதற்காக அவருக்கு சம்பளமும் அதிகமாக கொடுக்கக் கூட ரெடியாக இருக்கின்றனர்.

போகின்ற நிலையைப் பார்த்தால் விஜய் சேதுபதி ஹீரோ  கதாபாத்திரத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு வில்லன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் அவரும் ஹீரோவாக சாதிக்க முடியவில்லை.. வில்லன் கதாபாத்திரத்தில் மிகப்பெரிய ஒரு உச்ச நட்சத்திரமாக வரலாம் என கணக்கு போட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment