விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை சுக்குநூறாக உடைத்த பிரபல முன்னணி நடிகர்.! மக்கள் செல்வன் இனி தலையில் துண்டு போட வேண்டியது தான்.

vijay sethupathy
vijay sethupathy

சினிமா உலகில் அடியெடுத்து வைப்பவர்கள் ஒவ்வொருவரும் தான் ஆசைப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வருவார்கள். அப்படி சினிமா உலகை தேர்ந்தெடுத்து நடிக்க வந்தவர் தான் பிரகாஷ்ராஜ் இவர் ஆரம்பத்தில் ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் நடிக்கத் தொடங்கியவர் என்பது குறிப்பிடதக்கது அந்த காரணத்தினாலேயே இவர் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார்.

படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன் நடிப்பு திறமையை மாற்றியமைக்கும் வல்லமை பெற்று உள்ளார் பிரகாஷ்ராஜ். டாப் ஹீரோ தொடங்கி இளம் நடிகர்கள் வரை எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை திறம்பட ஏற்று நடிப்பார் அதனாலேயே தற்போது தமிழைத் தாண்டிலும் இவர் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து பிஸியான நடிகராகவே பார்க்கப்படுகிறார்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பெரும் அளவு படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் தற்போது தமிழ் சினிமா பக்கம் திரும்பி உள்ளதால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு அவரை புக் செய்து வருகின்றனர் அந்த வகையில் தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து இவர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் நடிக்கிறார் இப்படியே தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களை கைப்பற்றி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் சூர்யாவின் ஜெய்பீம், தனுஷின் திருச்சிற்றம்பலம் கார்த்தியின் விருமன் போன்ற படங்களை இவர் பிடித்துள்ளதால் தற்போது பல முன்னணி நடிகர்களும் பொறாமையில் இருக்கின்றனர்.

மேலும் பிரகாஷ் ராஜ் தற்போது கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு பல படங்களில் கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரகாஷ்ராஜ் தற்போது தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளது. பலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. வில்லன் ரோலில் இதுவரை நடித்து வந்த விஜய் சேதுபதியை அவர் ஓவர்டேக் செய்து விட்டார் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.