உழைக்கும் வர்க்கம் உழைப்பாளர்களுக்காக விஜய்சேதுபதி செய்த நெகிழ்ச்சியான செயல்.! வைரலாகும் புகைப்படம்

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில்  விஜய் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் வெளிவந்து  உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் என்ற புதிய அவதாரம் ஒன்றை எடுத்திருந்தார்.

வில்லன் கேரக்டர் சேதுபதிக்கு நன்றாக அமைந்ததால் அனைவரும் விஜய் சேதுபதியை பாராட்டினார்கள். இதனை தொடர்ந்து தெலுங்கில் வெளிவந்த உப்பண்ணா படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில்  ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு ரெடியாக உள்ளது.

ஆனால் தற்போது கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.எனவே OTT-யில் வெளியாவதற்கு அதிக  கவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து  இந்த மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்றும் கூறி உள்ளார்கள் ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரவில்லை.

இந்நிலையில் தற்போது விஜய்சேதுபதி லாபம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நேற்று மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் என்பதால் பலர்  தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதி உழைப்பாளர்களுக்கு நன்றி கூறும் வகையில் படக்குழுவினர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தவகையில் தற்போது விஜய்சேதுபதி,ரமேஷ் திலக் மற்றும் லாபம் படக்குழுவினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து உண்மையான உழைப்பாளரும்,கம்யூனிஸ்ட்வாதியுமான இயக்குனர் ஜெகநாதன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்நிலையில் அஞ்சலி செலுத்திய போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் விஜய் சேதுபதி.