மீண்டும் கமலுடன் மோதபோகும் விஜய்சேதுபதி.! மாஸ் இயக்குனர் கொடுத்த அப்டேட்..

0
kamal-hassan
kamal-hassan

உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மிகப்பெரிய வெற்றிலை பற்றிய திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இவர் இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தில் கமல் அவர்கள் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிகர் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரதீப் சிங், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர்கள் நடித்த வருகின்றனர். சில காலங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதனை தொடர்ந்து நடிகர் கமலின் அடுத்த அடுத்த திரைப்படங்களின் அப்டேட்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தலைவன் இருக்கிறான் என்ற திரைப்படத்தில் தானே நடித்து இயக்குவதையும் கமல் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். அதன் பிறகு தன்னுடைய பிறந்த நாளின் பொழுது இயக்குனர் மணிரத்தினத்துடன் இணைந்து பணிபுரிய போவதாகவும் தன்னுடைய அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் இந்த படம் கமலுக்கு 234ஆவது படமாக அமைய இருக்கிறது. கமல் தன்னுடைய 233 வது படத்தினை இயக்குனர் ஹச் வினோத்துடன் இணையலாம் என முடிவு செய்து இருக்கிறாராம் அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக HK 233 என பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இதனைப் பற்றி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமீப பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்த படத்தின் மற்றொரு அப்டேட் வெளியாக இருக்கும் நிலையில் அதாவது HK 233 மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இணைந்து இருக்கிறார். இவர் இதற்கு முன்பாக கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்த அசத்திருந்தார் விஜய் சேதுபதி. இப்படிப்பட்ட நிலையில் எச் வினோத் இயக்கத்தில் மீண்டும் இவர்களின் கூட்டணி உருவாக இருக்கிறது.

இவ்வாறு விஜய் சேதுபதி தற்பொழுது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்த மாஸ்டர், விக்ரம் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட்டான நிலையில் இனி வரும் திரைப்படங்களும் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் கமல் அவர்களின் HK 233 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.