அஜித்துக்கு வில்லனாக நடிக்க இருந்த விஜய் சேதுபதி.! கடைசி நேரத்தில் ஏமாந்துப்போன மக்கள் செல்வன்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களில் ஒரு சிலர் மட்டுமே ஹீரோ என்ற அந்தஸ்தையும் தாண்டி வில்லன்னாக நடித்து அசத்துவார்கள் அவர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்பத்தில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வெற்றி கண்டார்.

ஒரு கட்டத்தில் இவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி வெற்றியை ருசித்தார் அதன் பின் விஜய் சேதுபதி நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான். அன்றிலிருந்து தனது மார்க்கெட்டை ஒவ்வொரு படத்தின் பொழுதும் உயர்த்தி கொண்டே வருகிறார் இதனால் இப்பொழுது அவருக்கு வாய்ப்புகள் ஏராளமாக கிடைக்கிறது.

குறிப்பாக ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாக நடிக்கவும் வாய்ப்புகள் ஏராளமாக அவருக்கு குவிந்த வண்ணமே இருக்கிறது இப்பொழுது கூட விஜய் சேதுபதி கையில் ஜவான், விடுதலை போன்ற திரைப்படங்கள் இருக்கின்றன. இப்படி ஓடிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி தனது சினிமா மார்க்கெட்டுக்கு ஏற்றார் போல தனது சம்பளத்தையும் அதிகமாக உயர்த்தி வாங்கி வருகிறார்.

இதனால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து சமீபத்தில் விலாவாரியாக சொல்லி உள்ளார் அதில் அவர் சொன்னது..

அஜித் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கேட்டார்கள் நானும் சரி என்று சொன்னேன் ஆனால் அதன் பிறகு அஜித் தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை இது எனக்கு ரொம்ப ஏமாற்றம் ஆனது என நொந்து போய் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு அஜித் ரசிகர்கள் பலரும் பதில் கொடுத்தும் வருகின்றனர்.

Leave a Comment