பிரபல இயக்குனரின் படத்திலிருந்து திடீரென விலகிய விஜய் சேதுபதி.!

vijaysethupathy

நடிகர் விஜய் சேதுபதி பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்க இணைந்திருந்த நிலையில் அது குறித்த புகைப்படங்கள் வெளியானது. இப்படிப்பட்ட நிலையில் திடீரென அந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி அவர்கள் விலகி இருப்பதாக கூறப்படுகிறது  தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு அடுத்த அடுத்த பல திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக ‘ஃபார்ஸி’ என்ற வெப் சீரியல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சந்தானம் ஆகியவர்களின் கூட்டணியில் ‘அரண்மனை 4’ திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. அதற்காக அனைத்து பிரபலங்களும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகி வைரலானது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது அதாவது இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ள நிலையில் விஜய் சேதுபதிக்கு பதில் பிரபல நடிகரைசுந்தர் சி தேடி வருவதாக கூறப்படுகிறது மேலும் இது குறித்து விரைவில் அறிக்கை வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

vijay-sethupathi
vijay-sethupathi

சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் மூன்று பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள் என தகவல் வெளியான நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வந்தவர்கள்.

இப்படிப்பட்ட நிலையில் திடீரென விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து விலகி விட்டதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சனை ஏற்படுத்தியுள்ளது விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.