அஜித், விஜய்யை தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி – இப்போ ஒரு படத்திற்கு எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா.?

சினிமா உலகில் ஒரு நடிகர் ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்து விட்டால் அதிலேயே பயணிப்பது வழக்கம் ஆனால் நடிகர் விஜய் சேதுபதி அந்த எண்ணத்தை முற்றிலுமாக உடைத்து உள்ளார் இவர் ஹீரோ, கெஸ்ட் ரோல், வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும்..

அதில் தனது திறமையை வெளிக்காட்டி ஓடிக்கொண்டிருப்பதால் இவருக்கான சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்து வந்துள்ளன அந்த வகையில் இந்தி தெலுங்கு போன்ற மொழிகளில் இவருக்கு வாய்ப்புகள் ஏராளமாக கொட்டி கிடைக்கின்றன.

விஜய் சேதுபதி அண்மைக்காலமாக வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டி வருகிறார். அந்த வகையில் விஜயின் மாஸ்டர், கமலின் விக்ரம் போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படங்களை தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன அந்த வகையில் இந்தியன் 2, தேவர்மகன் 2, புஷ்பா 2 பல்வேறு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இது போதாத குறைக்கு நடிகர் விஜய் சேதுபதி வெப் சீரிஸ் மற்றும் ஹிந்தி பக்கமும் நடிக்க உள்ளார் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி சுமார் 35 கோடி சம்பளம் வாங்க உள்ளார் என கூறப்படுகிறது அதேசமயம் ஹிந்தியில் நான்கு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் அந்த நான்கு படத்திற்காக சுமார் ஒவ்வொரு படத்திற்கு மட்டுமே 40 கோடி சம்பளம் வாங்க உள்ளார் என கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் விஜய் சேதுபதியின் மார்க்கெட் உயர உயர தனது சம்பளத்தையும் உயர்த்தி உள்ளார். ரஜினி கமல் அஜித் விஜய் ஆகியவர்களை தொடர்ந்து இவரும் தனது சம்பளத்தை கணிசமாக ஒவ்வொரு படம் வெற்றியின் பொழுதும் உயர்த்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு படத்திற்கு 40 கோடி சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment