சூர்யாவை ஓவர்டேக் செய்த விஜய் சேதுபதி.? காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் – இதுவரை அள்ளிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..

அண்மைகாலமாக டாப் நடிகர்கள் படங்களின் வசூல் சாதனையை வளர்ந்து வரும் ஹீரோக்கள் முறி அடிக்க ஆசைப்படுகின்றனர். அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் எதற்கும் துணிந்தவன் இந்த படம் முழுக்க முழுக்க  மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துரைக்கும்.

சமூக அக்கறை உள்ள படமாக இது இருந்ததால் அனைத்து தரப்பட்ட மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் நன்றாகவே ஓடியது. இந்த படம் தமிழகத்தில் மட்டுமே நல்ல வசூல் வேட்டை நடத்தியது. எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு வந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் அந்த வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான இந்த படத்தில் ஹீரோயினாக தென்னிந்திய டாப் ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர் இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காதல் காமெடி என அனைத்தும் சிறப்பாக இருந்த காரணத்தினால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சிறப்பாக ஓடியது.

ஆரம்பத்திலிருந்தே இந்த படத்திற்கான வரவேற்பு நன்றாக இருந்ததால் வசூலையும் அள்ளிக் குவித்தது இதுவரை தமிழகத்தில் மட்டும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் 39 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது சொல்லப்போனால் நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் தமிழ்நாட்டு வசூலை முறியடித்து உள்ளது.

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதியின் படம் சினிமாகாரர்களுக்கு நல்ல வசூல் செய்த திரைப்படமாக அமைந்துள்ளது. மேலும் இது அவருக்கு நல்லதொரு படமாக அமைந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment