ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் இல்லை என பட வாய்ப்பை நிராகரித்த விஜய் சேதுபதி.?

0

மக்கள் செல்வன் என்ற பட்டத்தோடு தமிழ் திரையுலகில் வலம் வருபவர் விஜய் சேதுபதி இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகிக் கொண்டே வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவரை வைத்து திரைப்படங்களை இயக்க பல இயக்குனர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள் விஜய் சேதுபதி திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் எந்த இயக்குனருக்கு கால்ஷீட் தருவது என்று குழப்பத்தில் இருக்கிறாராம் அந்த அளவிற்கு இவருக்கு பட வாய்ப்பு குவிந்து கொண்டே போகிறது என தகவல் கிடைத்துள்ளது.

தமிழ் மட்டுமல்லாமல் பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் இந்நிலையில் விஜய் சேதுபதியை பற்றி ஒரு தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதாவது உலகம் முழுவதும் 1994 ஆம் ஆண்டு வெளியான பாரஸ்ட் கேம்ப் ஹாலிவுட் திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து பல விருதுகளைப் பெற்று சிறந்த படங்களில் ஒன்றாக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை லால் சிங் சட்டா என்ற பெயரில் ஹிந்தியில் இயக்கி  வருகிறார்களாம் அதற்காக பாலிவுட் நடிகர் அமீர் கான் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் படத்தையும் தயாரித்து வருகிறாராம்.

மேலும் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே இரண்டாம் உலகப் போர் காட்சிகள் இடம் பெறுவதால் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி சக போர் வீரனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

vijay sethupathi32
vijay sethupathi32

ஆனால் என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை படப்பிடிப்பு நடக்காமல் இருந்ததும் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் இருந்து விலகிக் கொண்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது மேலும் இவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கப்போவதாக தகவல் வைரலாகி வருகிறது இதனைத் தொடர்ந்து இந்த தகவலை அறிந்த விஜய் சேதுபதி ரசிகர்கள் பலரும் எதற்காக விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தை நழுவ விட்டார் என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.