நடிகர் சந்தானம் போல் உருமாறிய விஜய் சேதுபதி.! வெளியான விக்ரம் பட போஸ்டர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி நடிகராகவும் மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரங்களிலும் அதற்கேற்றவாறு நடித்து கொடுத்து அசத்தி வருகிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தர்மதுரை, சேதுபதி போன்ற திரைப்படங்கலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் என்று கூட சொல்லலாம்.

அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில். மேலும் ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

vijay sethupathi

நடிகர் விஜய் சேதுபதிக்கு கதாநாயகனைவிட வில்லன் கதாபாத்திரம்  மேலும் அவரை உயர்த்தியுள்ளது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் வில்லனாக நடித்துள்ளார். இந்த விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் கமல், பகத் பாசில், நரேன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் விக்ரம் திரைப்படத்திலிருந்து மூன்றாவது லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி அவர்கள் நடிகர் சந்தானம் அவர்கள் டிக்கிலோன திரைப்படத்தில் நடித்த கெட்டப்பில் தற்போது விஜய் சேதுபதியும் நடிகர் சந்தானம் கெட்டப்பில் விக்ரம் படத்தில் நடிக்கிறார் அந்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version