விக்ரம் கமலிடம் வாங்கியது பத்தாதுன்னு leo விஜய்யிடம் வாங்கபோகும் விஜய்சேதுபதி.! லியோ அப்டேட்

leo
leo

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் தற்போது விஜய் சேதுபதியும் இணைந்து இருப்பதாக சில தகவல் வெளியாகியிருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளர்களால் மட்டுமல்லாமல் நடிகர்களாலும் தேடப்படும் இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவருடைய படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று பல நடிகர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு வருகிறார்கள் அப்படி தொடர் வெற்றி படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் நாகராஜ்.

இவர் தற்போது விஜயை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்த நிலையில் அடுத்த 50 சதவிகிதம் படப்பிடிப்பு சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மிஸ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின் காட்சிகள் படமாக்கி விட்டுவிட்டதாகவும் அடுத்ததாக சஞ்சய் தத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் பகத் பாஸில் மற்றும் கமல் ஆகியோர் இணைந்து இருப்பதாக தகவல் வெளியானது இதை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு விக்ரம் பட நடிகர் இணைந்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இன்னம் எவ்வளவு சஷ்பெஸ் வைத்திருப்பார் லோகேஷ் என்று கூறி வருகின்றனர்.

அதாவது இயக்குனர் லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது லியோ திரைப்படத்திலும் இணைந்து இருப்பதாக சில தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது விஜய் சேதுபதி லியோ திரைப்படத்தில் எந்த ஒரு காட்சியிலும் நடிக்க வில்லையாம் அதற்கு பதிலாக அவருடைய குரல் மட்டும் இருக்கும் என கூறப்படுகிறது இதற்காக விஜய் சேதுபதி அவர்கள் 3 நாட்கள் கால் சீட்டு கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையான தகவலாக தெரியவில்லை விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை லோகேஷ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.