மீண்டும் போலிசாக மிரட்டும் விஜய்சேதுபதி.! ரிலீஸ் தேதியுடன் வைரலாகும் டிஎஸ்பி போஸ்டர்.!

0
DSP 1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் சேதுபதி தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் கதாநாயகராக சினிமாவில் பிரபலம் அடைந்த இவர் சமீப காலங்களாக வில்லன், குணச்சித்திர நடிகர் என தொடர்ந்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில் இவருக்கு ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.

அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது தன்னுடைய 46வது திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்த திரைப்படத்தை பொன்ராம் இயக்க விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு டிஎஸ்பி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்து உள்ளார்.

மேலும் இவர்களை தொடர்ந்து பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தை நடித்துள்ளார்கள் இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

DSP
DSP

அதில் டிஎஸ்பி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை பட குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள் அதன்படி இந்த படம் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி வெளியாக உள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பட குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் தற்பொழுது டிஎஸ்பி திரைப்படத்தின் போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

TSP
TSP

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் டிஎஸ்பி திரைப்படத்தினை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் சூரி ஹீரோவாக நடித்த இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.