விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான லாபம் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.?.?

laabam
laabam

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஹீரோ வில்லன் என்ற கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதை வெகுவாக கவர்ந்து உள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழில் மாஸ்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார்.

இருப்பினும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் போட்டி போட்டுக்கொண்டு அவரை படத்தில் புக் செய்து வருகின்றனர். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவருகின்றன அந்த வகையில் துக்ளக், தர்பார் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளிவந்து மக்களை மகிழ்வித்தது’.

இந்த நிலையில் மற்றொரு திரைப்படமான ஜெகநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான லாபம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது.  படம் வெளியாகி நல்ல லாபத்தை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம்  நல்ல பெயரை பெற்றாலும் லாபம் சொல்லிக்கொள்ளும்படி பெரிய அளவில் விமர்சனம் பெறவில்லை என ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது திறமையை காட்ட கூடிய விஜய்சேதுபதி. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் இதுவரையும் சொல்லிக்கொள்ளும்படி மிகப்பெரிய லாபத்தை பார்த்தது இல்லையாம் அது போலவே லாபம் திரைப்படமும் தற்போது அவருக்கு அதையே கொடுத்துள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் ஜெகநாதன் இறந்த பிறகு இந்த திரைப்படம் வெளிவந்ததால் ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்தனர். ஆனால் சொல்லிக்கொள்ளும்படி கதையம்சம் இல்லாவிடினும் விஜய் சேதுபதிக்காக தற்போது இந்த படம் ஓடுகிறது. இந்த திரைப்படம் 6 கோடி வரை வசூலித்திருக்கும்  என கூறப்படுகிறது.