தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பினாலும் அசைக்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. விஜய்சேதுபதி தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக புதிய அவதாரம் எடுத்திருந்தார்.இவரின் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பாராட்டப்பட்டது. இப்படத்தில் விஜய் எந்த அளவிற்கு நடந்ததோ அதே அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் விஜய் சேதுபதி.
பிறகு தெலுங்கிலும் உப்பன்னா என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இத்திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து உப்பண்ணா திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யவுள்ளது.இத்திரைப்படத்தை விஜய் சேதுபதி வாங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீசாக உள்ளது. அந்த வகையில் தியேட்டரில் ரிலீஸ்சாகும் என்று கூறி இருந்தார்கள் ஆனால் தற்பொழுது கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனவே ரிலீசாகும் தேதி தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் மனைவி, மகன் மற்றும் மகள் இருவரையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவருடைய தங்கையை இதுவரையிலும் நாம் பார்த்ததில்லை.

அந்த வகையில் விஜய் சேதுபதி தனது அம்மா மற்றும் மனைவி, தங்கை என்று குடும்பத்துடன் கடை திறப்பு விழாவிற்கு சென்று உள்ளார்கள். அவ்வபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.
