vijay sethupathi : தமிழ்சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் விஜய் சேதுபதி, இவரின் வளர்ச்சியை கண்டு பல இளம் நடிகர்கள் வியக்கிறார்கள், அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிது புதிதான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறும் பல முன்னணி ஹீரோக்களுக்கு இடையே நடிப்பு என்றால் நடிப்பு மட்டும்தான், நான் ஹீரோ என்ற குறுகிய வட்டத்தில் நிற்க விரும்பவில்லை எனக் கூறி வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர் விஜய் சேதுபதி.
தற்பொழுது விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் வில்லனாகவும் மாஸ் காட்டி வருகிறார், இவர் ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், ஆரம்ப காலத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படத்தில் ஆடியோ லான்ச் வெளியீட்டு நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் ஒன்றாக அமர்ந்து பார்த்துள்ளார்.
ஆனால் இப்பொழுது தென்னிந்திய அளவிலேயே பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளர்ந்து விட்டார், விஜய் சேதுபதியின் அசுர வளர்ச்சியை இந்த ஒரு புகைப்படமே உணர்த்தும்.
இதோ அந்த புகைப்படம்.
