வாடா செல்லம் உன்னை ஹீரோவா ஆக்கிறேன் விஜய் மகனை அழைத்த விஜய் சேதுபதி.? அதுவும் இந்த படத்தின் இரண்டாம் பாகமா.!

தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தற்போது நல்ல நிலையில் வளர்ந்துள்ள நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான், இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களத்தை உடையவை அதனால் மிக எளிதாக வெற்றி பெற்று வந்தார்.

இவர் நடிப்பில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த திரைப்படம் என்றால் அது இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம்தான், இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது, குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்ற காமெடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தை இயக்குனர் கோகுல் எழுதி இயக்கியிருந்தார், இந்த திரைப்படத்தில் பெருசாக கதை இல்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைத்தது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரை படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்யின் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்ய இருக்கிறாராம், மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் இதைப் பற்றி விஜய்யிடம் விஜய்சதுபதி பேசியதாகவும் விஜய்யும் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர்களது நட்பு வட்டாரத்தில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இரண்டாம் பாகத்தில் விஜய்யின் மகன் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது, அதேபோல் படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு அதை பற்றி பேசிக் கொள்ளலாம் என தளபதியும் கூறிவிட்டாராம், இப்படி இருக்கும் நிலையில் தளபதி விஜய்யின் மகன் கனடாவில் இருந்து வந்தவுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது மேலும் இந்த இரண்டாம் பாகத்தையும் கோகுல் தான் எழுதி இயக்க போகிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Leave a Comment