விடுதலை பட நடிகையை பற்றி புகழ்ந்து தள்ளும் விஜய் சேதுபதி.! அதிலும் என்ன சொல்றாரு பாத்தீங்களா.!

சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் தான் விடுதலை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான இந்த விடுதலை முதல் பாகத்திற்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு தந்தார்கள்.

அதனை தொடர்ந்து பார்த்தால் விடுதலை திரைப்படத்தின் வசூலும் ஓரளவுக்கு வந்துவிட்டது எனவும் தகவல் வெளிவந்ததை நாம் பார்த்திருப்போம்.இதைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி,சூரி,பவானி ஸ்ரீ போன்ற முக்கிய பிரபலங்கள் நன்றாக நடித்துள்ளதால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

ஒரு சில ரசிகர்கள் விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என கேட்டு வந்த நிலையில் விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இன்னும் ஒரு சில சிறு சிறு வேலைகள் இருப்பதாகவும் ஒரு சில காட்சிகள் மட்டும் எடுத்து விட்டால் விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் ரெடியாகிவிடும் என கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு பல சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமல்லாமல் பலரும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி தான் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இந்நிலையில் விடுதலை திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா சமீபத்தில் நடந்துள்ளது அதில் படத்தில் நடித்துள்ள பல பிரபலங்களும் பேசி உள்ளார்கள்.

குறிப்பாக விஜய் சேதுபதி நடிகை பவானி ஸ்ரீ அவர்களைப் பற்றி பேசி உள்ளார் அதில் அவர் கூறியது என்னவென்றால் சிட்டியில் வளர்ந்த பெண் மாதிரி தெரியல கிராமத்து பெண் போலவே இந்த திரைப்படத்தில் அழகாக நடித்துள்ளார் என்று அவர் பேசியது தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பவானி ஸ்ரீ ரசிகர்கள் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

Leave a Comment