ஒட்டுமொத்த ஹீரோக்களின் பாதையை மாற்றிய விஜய்சேதுபதி.!மக்கள் செல்வன் என்றால் சும்மாவா

2010ஆம் ஆண்டு வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபதி. இதுதான் அவரின் முதல் படமாக இருந்தாலும் இத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.  பெரும்பாலும் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களின் மீது கலவையான விமர்சனங்கள் வருவது வழக்கம் ஆனால் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த இதுவரையிலும் எந்த திரைப்படமும் கலவை விமர்சனத்தைப் பெற்றது இல்லை இதுவே அவருக்கு நல்ல வெற்றி என்றுதான் கூறவேண்டும்.

இப்படிப்பட்ட நிலையில் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்து சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார். ஹீரோவாக நடித்து வந்த இவர் தற்போது வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் வெளிவந்த உப்பண்ணா திரைப் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து ஹீரோவாகவும்,வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இயக்குனர், டான்ஸ் மாஸ்டர், நடிகருமான பிரபுதேவா நடித்து வரும் பஹீரா திரைப்படத்திலும், ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் எனிமி திரைப் படத்திலும் வில்லனாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.  இவ்வாறு இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே ராகவா லாரன்ஸ் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் விக்ரம் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க உள்ளார்.