சினிமாவிற்கு வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன வேலை செய்தார் தெரியுமா.? வைரலாகும் தகவல்.

0

மற்ற நடிகர்களை விடவும் தொடர்ந்து வித்தியாசமான கதை உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவனாக வருபவர்தான் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து பிரபலமடைந்து தற்போது தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து ஏராளமான மொழி திரைப்படங்களிலும் படிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

இதற்க்கு முக்கிய காரணம் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தது தான். வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

எனவே இத்திரைப்படத்தினை தொடர்ந்து தெலுங்கில் உப்பண்ணா என்ற திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை தந்தது. என்றால் இத்திரைப்படம் வெளியாகி சில நாட்களிலேயே பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

அதோடு இவர் தமிழ் சினிமாவின் கலைஞர்களுக்கும் முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.அதோடு தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து கலைஞர்களுக்கு செய்து வருகிறார்.  இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து இயக்கப்பட்ட திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ள இவர் பல கோடி சம்பளமாக பெற்று வருகிறார்.

தற்போது இவர் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தாலும் ஆரம்ப காலத்தில் சாதாரண வேலை ஒன்று தான் பார்த்துள்ளார். அந்த வகையில் சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு முன்பு ஃபாஸ்ட் ஃபுட் கடை ஒன்றில் 750 ரூபாய்க்கு வேலை செய்துள்ளார். இரவு 7:30 மணி முதல் 12:30 மணி வரை செய்வதாகவும் சமீப பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த வேலையை தொடர்ந்து டெலிபோன் பூத் ஒன்றிலும் வேலை செய்ததாக கூறியுள்ளார்.